'பரியேறும் பெருமாள்' படத்தை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தனது வி கிரியேஷன்ஸ் மூலம் தானு தயாரிக்கிறார்.
தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், நட்டி என்கிற நடராஜன், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
திருநெல்வேலியை சுற்றியுள்ள ஊர்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.