தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தளபதி 64 படப்பிடிப்பில் சிக்கல்: ஆக்ஷன் சொல்ல முடியாமல் டெல்லியில் தவிக்கும் இயக்குநர் - காற்று மாசு காரணமாக திணறும் தளபதி 64

டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசு காரணமாக தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

thalapathy 64

By

Published : Nov 4, 2019, 9:05 PM IST

சமீபத்தில் வெளியான விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, பெயர் சூட்டப்படாத தனது 64ஆவது படத்தில் ('தளபதி 64') விஜய் நடித்துவருகிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதில் விஜய் கலந்துகொண்டார், ரசிகர்கள் விஜய்யை கண்ட மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டனர். இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய்யும் தனது வழக்கமான பாணியில் ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்து கையசைத்தார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. தற்போது, டெல்லியில் காற்று மாசு காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறைவான நேரம் மட்டுமே விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

விஜய் - விஜய்சேதுபதி இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தை 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதையும் வாசிங்க: மங்கைகளுடன் 'பிகில்' மைக்கேல் போட்ட குத்தாட்டம் வெளியான 'பிகில் பிகில்' பாடல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details