நடிகர் அஜித்குமார் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வழக்கறிஞராக தோன்றும் 'நேர்கொண்ட பார்வை' வரும் வியாழக்கிழமை வெளியாக இருக்கிறது. முன்னதாக படத்தின் டிரெய்லரில் 'ஒருத்தர் மேல விஸ்வாசம் காட்டுறதுக்கு இன்னொருத்தர ஏன் அசிங்கபடுத்துறீங்க' என்ற பஞ்ச் வசனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாக வலம் வந்துகொண்டிருக்கிறது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் நிலையில், இதே பாணியில் நீதிமன்ற பின்னணியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெய்வதிருமகள் படம் பற்றிய ரீவைண்ட்.
வயதான தோற்றமும், குழந்தை மனமும் கொண்ட தந்தையின் மகளை, அவரிடம் இருந்து பிரிக்க நடக்கும் சதி திட்டங்களுக்கும் பாச போரட்டத்திற்கும் இடையே நடந்து செல்கிறாள் 'தெய்வதிருமகள்'. தமிழ் சினிமாவில் நீதிமன்ற பின்னணியில் வந்த படங்களில் ரசிகர்களை மனதை உருக்கிய படம்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம், அனுஷ்கா, அமலபால், சந்தானம், சச்சின் வடேகர் உள்ளிட்ட பலர் நடித்து 2011ஆம் ஆண்டு வெளியான படம் 'தெய்வதிருமகள்'. இது 'ஐ எம் சாம்' என்ற ஹாலிவுட் படத்தின் தமிழில் வெர்ஷன்.
ஊட்டி அருகே ஒரு கிராமத்தில் வாழும் ஆட்டிசம் தாக்கத்திற்குள்ளான விக்ரமின் மனைவி அழகான பெண் குழந்தை பெற்றொடுத்து இறந்துவிடுகிறார். மகளின் மேல் தந்தைக்கு உயிர். தந்தை மேல் மகளுக்கு உயிர். அப்பாவுக்கும், மகள் மீது அளவு கடந்த பாசம். இவர்கள் அழகான வாழ்வில் விக்ரமின் பணக்கார மாமனார் குடும்பம் குறுக்கிடுகிறது. விக்ரமை ஏமாற்றி, குழந்தை நிலாவை (சாரா) தூக்கிச் செல்கிறது மாமனார் குடும்பம். சென்னை வீதியில் அனதையாக 'நிலா...நிலா...' என்று கூவியபடி வலம் வரும் அப்பா கிருஷ்ணா பாசப்போராட்டத்துக்காக நீதி கேட்கிறார். வக்கீல் அனுராதா (அனுஷ்கா), மற்றும் உதவியாளர் வினோத் (சந்தானம்). கிருஷ்ணாவின் மாமனாரின் வக்கீலாக வருகிறார் பாஷிம் (நாசர்). பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை அழகான திரைக் கதையால் வெளிப்படுத்தியிருப்பார் இயக்குநர்.
இப்படம் தொடங்கியது ஒரு பகுதி, ஊட்டி அவலஞ்சியின் குழுகுழு சூழிலை கண்முன் நிறுத்தியிருந்தாலும், மறுபுற நீதிமன்றத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பாசப்போராட்டத்தை உருக்கமாக வெளிப்படுத்தியது. மகள் நிலாவை கிருஷ்ணாவிடம் காட்டாமல் மறைத்துவைக்கும் மாமனார் குடும்பத்தினர், மகளை பார்ப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து தனது கட்சிக்காரருக்காக ஒரு வக்கீல் எடுக்கும் பொறுப்புணர்வை அனுராதா அழகாக செய்திருப்பார். படத்தில் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளும், அதனால் ஏற்படும் விளைவுகளாக ரசிகர்கள் சலிக்காத வண்ணம் அமைந்திருக்கும். பாஷியம் என்ற பெயரில் மூத்த வழக்கறிஞராக தோன்றும் நாசர், தனது கட்சிக்காரை ஜெயிக்க வைப்பதற்காக வகுக்கும் திட்டங்களை, ஜூனியர் வழக்கறிஞராக திகழும் அனுராதா (அனுஷ்கா) அண்ட் கோ சட்டப்படியும், அதை மீறியும் தவிடுபொடியாக்கும் காட்சிகள் ரசிகர்களை பல்ஸை எகிறவைத்து மனதை ஆசுவாசப்படுத்தியது. அனைத்து திட்டங்களும் தனக்கு எதிராக அமையை, இறுதி முயற்சியாக கிருஷ்ணாவை கடத்தி வைத்தும், மிரட்டியும், பாஷ்யத்தின் உடல்நலம் குன்றிய மகனுக்கு உதவி செய்து, அவரது திடமான மனதை பாசத்தால் உடைக்கிறார்.
மனதளவில் குழந்தையாக இருக்கும் கிருஷ்ணா, தனது மனமாற்றத்தை அப்படியே வெளிக்காட்டாமல் நிலாவை, கிருஷ்ணாவுடன் இருந்தால் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களை உணர்வுபூர்வமாக புரிய வைத்து இருந்தாலும், கிருஷ்ணாவுடன் நிலா வாழ்வதில் எனக்கு 'நோ அப்ஜெக்ஷன்' என்று கூறுவது அவர் மீது இருந்த ஒட்டு மொத்த வெறுப்பையும் தவிடுபொடியாக்கியது. கிருஷ்ணாவை தனது வீட்டில் தங்கவைத்து அவரை பாதுகாத்து வந்த அனுராதா, அன்பின் வெளிபாடும் அவர் மீது கொண்ட பரிதாபமும் ஒரு காரணம். குழந்தையின் சித்தியாக வந்து போகும் அமலாபால் அதிக சிரமப்படவில்லை. எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர் என அனைவருமே உணர்ந்து நடித்திருப்பார்கள். நீதிமன்றக் காட்சிகள் வெகு எதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இறுதிக் காட்சியில், பாஷ்யமின் உணர்பூர்வமான பேச்சை அனைவரும் உற்று கவனிக்க, அப்பாவும் கிருஷ்ணா, மகள்
நிலா சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களும் கூட அழுது விடும். இந்தக் காட்சிக்கு தனது இசை மூலம் உயிரூட்டியிருப்பார் ஜிவி பிரகாஷ். இறுதி தீர்ப்பாக நிலாவை தந்தை கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் தெரிவிக்கின்றது. ஆனால் அதே இரவு கிருஷ்ணா, சித்தி ஸ்வேதாவிடம் (அமலாபால்) ஒப்படைத்து செல்வது அவர் குழந்தை மனதை விட்டு விலகி குழந்தைக்காக யோசிக்கும் மனநிலைக்கு மாறிவிட்டார் என்பதை காட்டுகிறது. தெய்வதிருமகள் உண்மையான பாசத்திற்கு சொந்தமானவள்.