தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'83' திரைப்படத்தின் புதிய லுக்! - ரோமி பாட்டியாவாக தீபிகா படுகோன் - தீபிகா படுகோன்

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் 83 திரைப்படத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த தன் கதாபாத்திரம் குறித்த புகைப்படத்தை நடிகை தீபிகா படுகோன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் செய்திகள்
83 திரைப்படத்தில் தீபிகா படுகோனின் புதிய லுக்

By

Published : Feb 19, 2020, 2:07 PM IST

1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டும், கபில் தேவ் தலைமையிலான அணி மேற்கொண்ட பயணத்தை அடிப்படையாகக் கொண்டும் உருவாகி வரும் திரைப்படம் ’83’

கபீர் கான் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாக நடிக்கவுள்ள நிலையில், ஏற்கனவே கபில் தேவை பிரதிபலிக்கும் ரன்வீர் சிங்கின் போஸ்டர் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலானது.

தொடர்ந்து ரன்வீர் சிங்கின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் கபில் தேவின் மனைவி ரோமி பாட்டியாவாக நடிக்கவுள்ள தீபீகா படுகோனின் தோற்றம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்தன.

தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க படத்தில் ரன்வீரோடு இணைந்து கபில் தேவ், அவரது மனைவி ரோமி பாட்டியாவுடன் தோன்றும் புகைப்படம் ஒன்றை, தனது சமூக வலைதள பக்கங்களில் தீபிகா படுகோன் பகிர்ந்துள்ளார்.

மேலும், புகைப்படத்துடன், இந்திய விளையாட்டு உலகின் வரலாற்றில் நிகழ்ந்த பொன்னான தருணங்களைப் பதிவு செய்யும் இந்தப் படத்தின் ஒரு சிறு அங்கமாக இருப்பது குறித்து தான் பெருமைக் கொள்வதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

ஆண்களின் வெற்றியில் அவர்களின் மனைவிகள் ஆற்றும் பங்கை, தன் அன்னையின் மூலம் தனிப்பட்ட வாழ்வில் கண்டு உணர்ந்துள்ளதாகவும், 83 திரைப்படம் தங்களது கனவுகளைத் தாண்டி, தங்களின் கணவர்களது கனவுகளுக்கு முக்கியத்துவம் தரும் அனைத்துப் பெண்களுக்குமான ஒரு செம்மை வாய்ந்த கவிதையாக இப்படம் அமையும் எனவும் அவர் தெர்வித்துள்ளார்

இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக பிரபல கோலிவுட் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'83' படம் உலகக் கோப்பை நினைவுகளை மலர வைக்கும் - நடிகர் ஜீவா

ABOUT THE AUTHOR

...view details