தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தீபிகா படுகோனை மனதார வாழ்த்திய கங்கனா ரனாவத்தின் சகோதரி! - rangoli chandel

மும்பை: ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் தீபிகா படுகோனுக்கு கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி தன் வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

rangoli

By

Published : Mar 26, 2019, 10:50 AM IST

லக்ஷ்மி அகர்வால் என்கிற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, மேக்னா குல்சர் இயக்கும் படம், ‘சப்பாக்’(Chhapaak). இப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.

தீபிகா படுகோன் - ரங்கோலி சேண்டல்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபிகா படுகோன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் நேற்று முதல் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரியும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வருமான ரங்கோலி சேண்டல் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டர் குறித்து பதிவிட்டிருந்தார்.

ரங்கோலி சேண்டலின் ட்வீட்!

அதில், “இந்த உலகம் எத்தனை கொடுமையான விஷயமாக இருந்தாலும், அது குறித்து பேச மறுக்கும். ஆனால், இந்த தடைகளை எல்லாம் கடந்து தீபிகா படுகோன் மற்றும் இயக்குநர் மேக்னா குல்சர் எடுத்திருக்கும் இந்த முயற்சி வியக்கத்தக்கது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக நான் இப்படத்திற்கு தலைவணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details