இந்திய பேட்மிண்டன் மிக முக்கிய வீராக விளங்கிய பிரகாஷ் படுகோனின் பேட்மிண்டன் அகாதமி இன்று தனது 25ஆவது ஆண்டை நிறைவுசெய்துள்ளது. இதற்காக பிரகாஷின் மகளும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்து இதயப்பூர்வமான பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
அப்பாவை நினைத்து பெருமிதம் கொண்ட தீபிகா படுகோனே - பி.வி. சிந்து
இந்திய பேட்மிண்டனில் உங்களது பங்களிப்பு மிக முக்கியமானது என நடிகை தீபிகா படுகோனே தனது தந்தை பிரகாஷ் படுகோனே குறித்து இதயப்பூர்வமான பதிவு ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Deepika Padukone
அதில், "பப்பா, இந்திய பேட்மிண்டனில் உங்களது பங்களிப்பு மிக முக்கியமானது. உங்கள் அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதிப்பாடு, உங்களது பல வருட உழைப்புக்கு நன்றி கூறுகிறோம். உங்களை நேசிக்கிறோம். உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். நீங்கள் எங்களுடன் இருந்தற்கு நன்றி" என்று பதிவிட்டிருந்தார்.
1980இல் பேட்மிண்டன் உலகில் நம்பர் 1 இடத்தை பிடித்த பிரகாஷ் படுகோனேக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவை இந்திய அரசால் வழங்கப்பட்டன.
TAGGED:
தீபிகா படுகோனே படங்கள்