ராமநகரா: ஜோகரபாள்யா அருகே நடைபெற்ற ‘லவ் யூ ரச்சு’ எனும் கன்னட படத்தின் படப்பிடிப்பில் மின்சாரம் தாக்கி சண்டைப் பயிற்சி கலைஞர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் எனும் தமிழ்நாட்டை சேர்ந்த சண்டைப் பயிற்சி கலைஞர் உயிரிழந்துள்ளார். அஜய் ராவ், ரச்சிதா ராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘லவ் யூ ரச்சு’ படப்பிடிப்பின்போது மின் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விவேக் உள்பட இன்னொருவரும் காயமடைந்துள்ளார். விவேக் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.