ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படம் ஜப்பானில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இதை தர்பார் திருவிழா ஜப்பான் என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்தியா மட்டுமில்லாது, உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அவருக்கு ஜப்பான் நாட்டில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. ரஜினியின் ‘முத்து’ படம் ஜப்பான் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பார்கள். அதன்பிறகு வந்த ரஜினி படங்கள் அனைத்தும் ஜப்பான் மக்கள் ரசிக்கத் தவறவில்லை. தற்போது ‘தர்பார்’ இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘தர்பார்’. 19 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இதில் போலீஸாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. ஆனால், ஜப்பானில் படம் சக்கை போடு போடுகிறது. ஜூலை 16 அன்று ஜப்பானில் வெளியான ‘தர்பார்’, 21ஆம் தேதி வரை ஹவுஸ்ஃபுல் என தகவல் வெளியாகியுள்ளது. ‘தர்பார்’ படத்துக்காக ஒரு ஆண்டுக்கு மேல் ஜப்பான் ரஜினி ரசிகர்கள் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 19 years of youth: ப்ரியமுடன் வின்சென்ட் செல்வா