ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவன தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் எல்லாம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நவம்பர் 7ஆம் தேதி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ரஜினியின் தீம் மியூசிக் வெளியாகும் என அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.