இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தர்பார். இத்திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியான ரஜினிகாந்த் ’ஜெயிலுக்குள் செல்போனா?’ என்று கேள்வி கேட்க, உடன் இருக்கும் அதிகாரி ஒருவர், ’காசு இருந்தால் ஜெயிலுக்குள் இருப்பவர்கள் ஷாப்பிங்கூட செய்யலாம்’ என்று கூறுவார். இந்த வசனம், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சாடுவது போல் உள்ளது என்று கூறி சமூக வலைதளங்களில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
ஏ.ஆர். முருகதாசுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு! - பாதுகாப்பு
சென்னை: சசிகலாவை விமர்சித்து தர்பார் படத்தில் காட்சி வைத்ததால் இயக்குநர் ஏ.ஆர். முருகதாசுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புக் கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் சார்பில் இன்று, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தில் எந்த இடத்திலும், சசிகலா என்று பெயர்கூட குறிப்பிடப்படவில்லை என்றும் காழ்ப்புணர்ச்சியோடு ஏ.ஆர். முருகதாசுக்கு அச்சுறுத்தல் வருவதால், அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சசிகலா குறித்து தர்பாரில் காட்சி - ரஜினி, ஏ.ஆர். முருகதாஸ் மன்னிப்புக் கேட்கவேண்டும்!