தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து சாப்பிட்டவர் ரஜினி' - இயக்குநர் ஷங்கர் - ரஜினியின் தர்பார்

இளைய தலைமுறையினர் நேரத்தின் மதிப்பை ரஜினியை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

shankar
shankar

By

Published : Dec 8, 2019, 4:26 PM IST

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத், தயாரிப்பாளர் சுபாஷ் கரன், சுனில் ஷெட்டி, கதாசிரியர் கலைஞானம், நடிகர் அருண்விஜய், விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், ' ரஜினியுடன் பணியாற்றி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் அவரைப் பற்றி நினைக்காமல் இருந்தது இல்லை. நேரத்தை முறையாக கையாளுவதில் ரஜினி சிறந்தவர். ஒரு முறை புனேவில் 'சிவாஜி' படப்படிப்பின்போது கேரவனுக்குச் சென்றால், தாமதமாகும் என்று ரயில் தண்டவாளத்திலேயே அமர்ந்து சாப்பிட்டார்.

நேரத்தின் அருமை தெரிந்தவர். நேரம் தவறாமல் படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். இளைய தலைமுறையினர் நேரத்தின் மதிப்பை அவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தர்பார் படத்தில் ரஜினியைக் காவலர் கதாபாத்திரத்தில் பார்க்க காத்திருக்கிறேன்' என்றார்.

இதையும் படிங்க:

கமலுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை - நடிகர் லாரன்ஸ்

ABOUT THE AUTHOR

...view details