இந்திய திரை உலகமே கொண்டாடிய பாகுபலி, பாகுபலி-2 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர் இப்படத்தை டிடிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் (DVV) பிரமாண்டமான முறையில் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கிறது. இரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட போராளிகளின் கதையை மையப்படுத்தி உருவாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்.க்கு ஜோடியாக நடிக்கவிருந்த இங்கிலாந்து அழகி டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
இதில், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், டெய்ஸி காட்சிகள் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெறாது என்று டிடிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் (DVV) அறிவித்துள்ளது.