விஜய் நடிப்பில் உருவான ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். அதே படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர்தான் பிரியங்கா சோப்ரா. இதில் பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், பிரியங்கா அந்தப் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகியிருக்கிறார்.
தமிழன் படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலை விஜய்யும் பிரியங்காவும் சேர்ந்து பாடியிருப்பார்கள். இந்தப் பாடல் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. ஆனால், பிரியங்கா சோப்ரா என்ற நடிகையையும் தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை; அவருக்குள் இருந்த நல்ல பாடகியையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.