பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனைத் தொடர்ந்து, அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தற்போது மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னாள் காதலிக்காக பிரார்த்தனை செய்யும் விவேக் ஓபராய்! - ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராயின் குடும்பம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராதயாவுக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகரும், ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலருமான விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அவர்களது குடும்பம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்துவருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். விவேக் ஓபராயின் பதிவைக் கண்ட நெட்டிசன்கள் இன்னும் முன்னாள் காதலியை மறக்கவில்லையா, என்று கேலியாக கமெண்ட் செய்துள்ளனர்.