தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தனிமைப்படுவோம் நம்மை காக்க.. ஒன்றுபடுவோம் நாட்டை காக்க..! - வைரமுத்து - கரோனா தற்காப்பு குறித்து வைரமுத்து வீடியோ

சென்னை: தனிமைப்படுவோம் நம்மை காக்க... ஒன்றுபடுவோம் நாட்டை காக்க என்று கூறி மக்கள் ஊரடங்கு தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

Vairamuthu video on #Janatacurfew
Kavigar vairamuthu

By

Published : Mar 21, 2020, 5:46 PM IST

மக்கள் ஊரடங்கு தொடர்பாக கவிஞர் வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கரோனா வைரஸ் பெரும்தொற்று பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் பொதுமக்கள் மார்ச் 22ஆம் தேதி (நாளை) வரை ஊரடங்கு கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையடுத்து பிரபலங்கள் பலரும் மோடி கூறியதுபோல் கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வண்ணம், பொது இடங்களுக்கு யாரும் வராமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அறைக்குள் வாழ்வும் அன்பர்களே.. அறைகூவல்கள் இரண்டு. ஒன்று நம்மைக் காப்பது. மற்றொன்று நாட்டைக் காப்பது.

தனிமைப்படுவோம் நம்மை காக்க. பின் ஒன்றுபடுவோம் நாட்டை காக்க..

முதலும் முற்றுமாய் கவனம் கொண்டால் அஞ்சுவதில்லை, அஞ்ச வருவதும் இல்லை. கண் தூங்குவதில்லை, நாம் தோற்பதும் இல்லை.

இவ்வாறு அந்த வீடியோ பதிவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Vairamuthu video on #Janatacurfew

ABOUT THE AUTHOR

...view details