தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரைப்படத்தில் இணையும் ’குக் வித் கோமாளி’ பிரபலங்கள்; எகிறும் எதிர்பார்ப்பு! - சினிமா செய்திகள்

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அஷ்வின் குமார் கதாநாயகனாக நடிக்கும் “என்ன சொல்லப் போகிறாய்” படத்தில், அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி

By

Published : Jul 6, 2021, 12:52 AM IST

“குக் வித் கோமாளி” தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு கன்னிப் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் அஷ்வின். இவர் முதன்மை நாயகனாக நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு “என்ன சொல்லப் போகிறாய்” என பெயரிடப்பட்டுள்ளது.

ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரிக்க, பல முன்னனி நிறுவன விளம்பர படங்கள், இணையத்தொடர் இயக்குநர் ஹரிஹரன் இயக்குகிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ், இத்திரைப்படத்தில் காமெடியனாக நடிக்கிறார்.

நகர பின்னணியில் இப்படத்தின் படப்பிடிப்பு, ஜீலை 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவினை ரிச்சர்ட் எம்.நாதன் மேற்கொள்ளகிறார். விவேக் மெர்வின் கூட்டணி இசையமைக்கின்றனர். இரண்டு குக் வித் கோமாளி பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோலோச்சுமா கோலிவுட்? - கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details