தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அட்லீ - ஷாருக்கான் படத்திலிருந்து விலகினாரா நயன்தாரா? - டைகர்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திலிருந்து நயன்தாரா விலகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அட்லீ, ஷாருக்கான்
அட்லீ- ஷாருக்கான்

By

Published : Nov 10, 2021, 10:45 PM IST

இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கான் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு புனேவில் தொடங்கி நடைபெற்றுவந்தது. இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்தார்.

இதனிடையே, ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன் காரணமாக, ஷாருக்கான் படப்பிடிப்பில் கவனம் செலுத்தவில்லை.

இதிலிருந்து நயன்தாரா விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. ஆர்யன் கான் தற்போது ஜாமீனில் வெளிவந்த நிலையில், ஷாருக்கானின் மீண்டும் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறார்.

இந்நிலையில் ஷாருக்கான்- நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் லீக்காகியுள்ளது. இதிலிருந்து நயன்தாரா இப்படத்திலிருந்து விலகவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் படத்தின் அப்டேட் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:DON FIRST LOOK கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் கலக்கல்

ABOUT THE AUTHOR

...view details