தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என்பதை விவேக்கின் மரணம் காட்டுகிறது' - nayanthara condolence

சென்னை: விவேக்கின் மறைவு தொடர்பாக, நடிகை நயன்தாரா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Nayanthara
நயன்தாரா

By

Published : Apr 18, 2021, 11:44 AM IST

நடிகர் விவேக் மறைவையொட்டி திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், விவேக்கின் மறைவு தொடர்பாக நயன்தாரா இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா இரங்கல் அறிக்கை

அதில், "நடிகர் விவேக்குடன் பல ஆண்டுகளாக, குறிப்பாக விஸ்வாசத்தில் பணிபுரிந்தபோது எனக்கு இருந்த அற்புதமான நினைவுகளை எப்போதும் நினைத்து மகிழ்ச்சியடைவேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுச் சென்றுவிடுவார் என நினைக்கவில்லை.

நம்ப முடியாத, கணிக்க முடியாத வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என்பதை நடிகர் விவேக்கின் மரணம் காட்டுகிறது. நடிகர் விவேக்கின் குடும்பத்திற்கு எனது இரங்கல், இந்த இழப்பை எதிர்கொள்ள கடவுள் அவர்களுக்கு வலிமையை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா ட்வீட்

அதேபோல தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விவேக் இறப்புச் செய்தி கேட்டு என் இதயம் நொறுங்கிவிட்டது எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'சிலரே இறப்பிற்குப் பின்னும் இருப்பர்' - விவேக் உதிர்த்த சொல் இன்று அவருக்கே...!

ABOUT THE AUTHOR

...view details