மிஸ் சவுத் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுப்பதாக, மே 30ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் புகார் அளித்தார். இதையடுத்து தென்னிந்திய அழகிப் பட்டம் மீரா மிதுனிடமிருந்து பறிக்கப்பட்டது.
மாடல் அழகி மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு! - இயக்குனர் அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கில் பிரவீன்
சென்னை: 'மிஸ் தமிழ்நாடு' எனும் அழகிப்போட்டி நடத்தி பண மோசடி செய்ததாக நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மீரா மிதுன்
இது குறித்து மிஸ் சவுத் இந்தியா நிர்வாகிகள் கூறுகையில், 'மிஸ் தமிழ்நாடு 2019' என்ற நிகழ்ச்சியை நடத்த மைக்கேல் பிரவீன் என்பவர் உரிமம் பெற்றிருந்தார். ஆனால் இந்த தலைப்பை தவறாக பயன்படுத்தி மீரா மிதுன் நிகழ்ச்சி நடத்தினார். ஆடை வடிவமைப்பாளர்கள், மாடல் அழகிகள் ஆகியோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக தேனாம்பேட்டை மற்றும் எழும்பூர் காவல் நிலையங்களில் மீராமிதுன் புகார் கொடுப்பதற்கு முன்னதாகவே வழக்கு பதிவு செய்துள்ளோம், என்றார்.