தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நேற்று செல்வா... இன்று கௌதம் - பிடித்த காட்சிகளை பகிரும் ஒளிப்பதிவாளர் - ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பிடித்த காட்சிகள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா ஜெரோமியா நடிப்பில் உருவான திரைப்படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. இந்தத் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அரவிந்த் கிருஷ்ணா படத்தில் தனக்குப் பிடித்த காட்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

arvind krishna shares favorite shot in Pachaikili muthucharam
arvind krishna shares favorite shot in Pachaikili muthucharam

By

Published : May 16, 2020, 10:35 AM IST

'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் அரவிந்த் கிருஷ்ணா. இவர் இயக்குநர் கௌதம் மேனனின் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' திரைப்படத்திலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

சமீபத்தில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' திரைப்படத்தில் தனக்குப் பிடித்த காட்சி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கிருஷ்ணா பகிர்ந்தார். படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகா, சரத்குமாரிடம் பணம் பறிக்க அவரைக் காதலிப்பதுபோல் நடித்து ஏமாற்றுவார். அதேபோல் இன்னொரு நபரை ஜோதிகா ஏமாற்றுவதை சரத்குமார் கண்டுபிடிக்கும் காட்சியை அரவிந்த் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

முன்னதாக செல்வராகவன் இயக்கத்தில் '7ஜி ரெயின்போ காலனி' திரைப்படத்தில் தனக்குப் பிடித்த காட்சியை அரவிந்த் கிருஷ்ணா பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... 7G ரெயின்போ காலனி படத்தின் ஒளிப்பதிவாளருக்குப் பிடித்த காட்சி இதுதானா..!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details