தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகர், நடிகைகள் இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்களை தாண்டி அதற்கு பின்னால் இருக்கும் நபர்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. நல்ல படம் எடுக்க தேவையானது பணம்தான். தமிழ் சினிமாவை ஆட்கொள்பவர்கள் அதிகம் சினிமா பைனான்சியர்கள்தான். இதில் மிகவும் பிரபலமானார் சினிமா பைனான்சியர் முகன் சந்த் போத்ரா, பாரிவேந்தர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்து தமிழகத்தையே உலுக்கியவர்.
பிரபல சினிமா ஃபைனான்சியர் போத்ரா மாரடைப்பால் மரணம் - காலமானார்
சென்னை: பிரபல சினிமா பைனான்சியர் முகன் சந்த் போத்ரா இன்று மாலை ஏழு மணிக்கு மாரடைப்பால் காலமானார்.

முகன் சந்த் போத்ரா
அப்போது அவர் அளித்த பேட்டிகள் பாரிவேந்தரின் சொந்த வாழ்க்கை அம்பலமாக்கியது. பல உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படத்திற்கு பண உதவிகளை செய்து பல வெற்றி படங்களுக்கு இவர் காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில், பைனான்சியர் முகன் சந்த் போத்ரா இன்று மாலை ஏழு மணிக்கு காலமானார். இவரது இறுதிச் சடங்கு நாளை தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று போத்ரா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.