தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

TENET - கிறிஸ்டோபர் நோலனின் சயின்ஸ் ஃபிக்சன் - கிறிஸ்டோபர் நோலன்

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டீனெட்' (TENET) படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

christopher nolan's Tenet movie trailer
christopher nolan's Tenet movie trailer

By

Published : Dec 20, 2019, 10:27 AM IST

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், எலிசபெத் டெபிகி, பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'டீனெட்' (TENET). கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ், இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

டைம் ரிவர்சல் (time reversal) முறையைப் பயன்படுத்தி மூன்றாம் உலகப்போரை இரண்டு சர்வதேச உளவாளிகள் தடுத்து நிறுத்துவது தான் இந்த படத்தின் கதை. இதன் ட்ரெய்லர் வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இன்ஷெப்சன், இன்டர்ஸ்டெல்லர் போன்ற சயின்ஸ் ஃபிக்சன் படங்களின் மூலம் பார்வையாளர்களை மண்டையை பிய்த்துக்கொள்ள வைத்த கிறிஸ்டோபர் நோலன், இந்த முறை படத்தை டைம் ரிவர்சல் டெக்னாலஜியோடு தரயிருக்கிறார். கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்கள் இப்போதே இயற்பியல் புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். 'டீனெட்' ட்ரெய்லரை கலாய்த்து சில மீம்ஸ்கள் வலம்வரத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: Christoper_Nolan: வில்லாதி வில்லன்களை தந்த திரையுலக மேதை!

ABOUT THE AUTHOR

...view details