கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘சியான் 60’. இந்தப் படத்தில் விக்ரம், துருவ் ஆகியோர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என தெரியவில்லை. துருவ் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
கரோனா பரவல் காரணமாக இதன் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு படப்பிடிப்புக்கு தளர்வுகள் அளித்ததால் தற்போது படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருக்கிறது சியான் 60 படக்குழு.