தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்:  வெளியாகும் 'சிரஞ்சீவி 153' அப்டேட் - லூசிஃபர் தெலுங்கு அப்டேட்

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி  வரும் 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் 'சிரஞ்சீவி 153' திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை ( ஆகஸ்ட் 21 )மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லூசிஃபர்
லூசிஃபர்

By

Published : Aug 20, 2021, 9:34 PM IST

தெலுங்கு மெகா ஸ்டார் சீரஞ்சிவி தனது 152 படமான 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார்.

ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி, மோகன்லாலின் 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

சிரஞ்சீவி 153 அப்டேட்
சிரஞ்சீவியின் 153ஆவது படமான இதை, இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். தமிழ் இசை அமைக்கும் படத்தின் பணிகள் படப்படிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது.இந்த படத்தையும் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரணின் கோணிடெலா நிறுவனம் தயாரிக்கிறது. இதனுடன் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.தற்போது சிரஞ்சீவியின் பிறந்த நாள் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாளை (ஆகஸ்ட் 21)மாலை புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதனால் சிரஞ்சீவி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
லூசிஃபர்
மோகன் ராஜா 2001ஆம் ஆண்டு 'ஹனுமன் ஜங்கஷன்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர்.அதன் பின் மோகன் ராஜா எந்த தெலுங்கு படத்தையும் இயக்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் சிரஞ்சீவியை வைத்து படம் இயக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details