தெலுங்கு மெகா ஸ்டார் சீரஞ்சிவி தனது 152 படமான 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்: மெகா ஸ்டாரை வைத்து இயக்கும் மோகன் ராஜா - சிரஞ்சீவியை வைத்து இயக்கும் மோகன் ராஜா
மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இந்த படத்தை மோகன் ராஜா இயக்குவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, சிரஞ்சீவியின் 153ஆவது படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு உரிமையை ராம் சரண் கைப்பற்றினார். 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கைதான் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளது.
2001ஆம் ஆண்டு 'ஹனுமன் ஜங்கஷன்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் மோகன் ராஜா இயக்குநராக அறிமுகமானர். அதன் பின் மோகன் ராஜா எந்த தெலுங்கு படத்தையும் இயக்கவில்லை. சுமார் 19 ஆண்டுகளுக்கு பின் சிரஞ்சீவியை வைத்து படம் இயக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. லூசிஃபர் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.