தேசிய ஊரடங்கு காலத்தில் சமூக வலைதளத்தில் பல சேலஞ்ச்கள் ட்ரெண்டாகின்றன. சமீபத்தில் தலைகீழாக நின்று டி- ஷார்ட் அணிதல், பில்லோ சேலஞ்ச் (தலையணை மட்டும் வைத்து உடையாக அணிதல்) உள்ளிட்ட பல சேலஞ்ச், பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள் வரை கலக்கி கொண்டிருந்தது.
இதையடுத்து, தற்போது வீட்டு வேலைகளை செய்து பெண்களுக்கு உதவும் #BetheREALMEN என்ற சேலஞ்ச் வேகமாக பரவிவருகிறது. இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட 'பாகுபலி' இயக்குநர் ராஜமெளலி தன்னுடைய வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
பின் இதனை ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் செய்யுமாறு ட்விட்டரில் சேலஞ்ச் விடுத்தார். பின் அவர்கள் தெலுங்கு சினிமாவின் சீனியர்களான சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ் உள்ளிட்டோருக்கு பரிந்துரைத்தனர்.
தற்போது இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட சிரஞ்சீவி வீட்டை சுத்தம் செய்தல், தோசை சூடுதல், அந்த தோசை சிரஞ்சீவி தனது அம்மாவுக்கு பரிமாற அவர் சாப்பிடும் முன் சிரஞ்சீவிக்கு தோசையை ஊட்டிவிடுவது போன்ற வீடியோவை சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது இந்த வீடியோ சேலஞ்சை சூப்பர் ஸ்டார் ரஜினியும் செய்ய வேண்டும் என டேக் செய்துள்ளார். இந்த சேலஞ்சை ரஜினி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.