தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் மனத்தில் நல்லதொரு இடத்தை நடிகை சமந்தா பெற்றுள்ளார். அதற்கு அவர் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'யே மாய சேஸாவோ' திரைப்படம்தான் காரணம். இந்தத் திரைப்படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தின் தெலுங்கு ரீ மேக்காகும்.
அந்தப் படத்தில் சமந்தாவுக்கு பாடகி சின்மயி டப்பிங் கொடுத்திருந்தார். பல படங்களில் சமந்தாவுக்கு சின்மயிதான் குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சமந்தா திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து அவரை வாழ்த்தி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.
அதில் 'சமந்தாவின் குரலாக இருந்ததை மரியாதையாக கருதுகிறேன். இதற்கு முன்பாக இதை சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன். தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே பிரத்யூஷா அறக்கட்டளையைத் தொடங்கி இல்லாதவர்களுக்கு உதவினார். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்ததே அவரது மனக்கட்மைப்பும் மனஉறுதியும்தான். பல இந்தியர்கள் திருமணமானவுடனே ஒரு நடிகை நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் ஆண்களிடம் இது குறித்து எதுவும் கூறமாட்டார்கள். ஆண்களுக்கு அது வெறும் 'தொழில்' ஆனால் அதுவே பெண்களுக்கு 'நீ எப்படி இன்னும் வேலை செய்கிறாய்' என்றாகிறது. குறிப்பாக நடிகைகளுக்கு. சமந்தாவை பொறுத்தவரை அவரால் என்ன செய்யமுடியாது என சமூகம் சொல்கிறதோ, எந்த வேலையை செய்யக்கூடாது என சொல்கிறதோ அதை செய்வதே சாதனைதான், அவரது உறுதித்தன்மையை பல பெண்களும் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்' என்று பதிவு செய்திருந்தார்.
இதையும் படிங்க: ஸ்கிரிப்டுக்கு ஃபைனல் டச் - மகிழ்ச்சியில் செல்வராகவன் ரசிகர்கள்