#METOO புகார் கூறி தமிழ் திரை உலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியவர் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி. இதன் பிறகு இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்கள் கூறும் புகார்களையும் அவ்வப்போது ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். இவரது சமூக வலைதளப் பக்கங்களை இதுவரை 1.02 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் பாடகி சின்மயிடம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அப்படியே வெளியிட்டுள்ளார் பாடகி சின்மயி.