இந்திய- சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால் இந்தியர்கள் பலரும் சீன தயாரிப்புகளை புறக்கணித்து வருகின்றனர்.
'இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' - சனம் ஷெட்டி - India and China war
சீன பொருள்களை தவிர்த்து இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
சனம் ஷெட்டி
இந்நிலையில் இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி கூறுகையில், "சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை தவிர்க்க வேண்டும். டிக்டாக் மற்றும் பப்ஜி ஆப்களை புறக்கணித்து சீன நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்திவிட்டு இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் அனைவரும் இதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.