இந்தியாவில் வேகமாக பரவிவரும் கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசங்கம் தேசிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர்.
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் இருப்பதற்கு சில ஆக்டிவிட்டீஸை குழந்தை நட்சத்திரம் மானஸ்வி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னைப் போன்ற குழந்தைகள் வீட்டில் இருப்பதனால் போர் அடிக்கும் என்று நினைக்காதீர்கள். வெளியில் சென்றால் மட்டும் தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்பது இல்லை. வீட்டில் இருந்தபடியே நிறைய ஆக்டிவிட்டீஸ் செய்யலாம். டிராயிங் வரையலாம், ஸ்கெட்ச் பண்ணலாம், அதேபோன்று பெற்றோர்களும் வீட்டிலிருந்தபடியே குழந்தைகளுக்கு புது விஷயங்களை சொல்லித் தரலாம். குழந்தைகளுடன் விளையாடலாம். கதை சொல்லலாம்.