நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார்.
யூ-டியூப்பில் சாதனை படைக்கும் சிவகார்த்திகேயனின் செல்லம்மா பாடல்! - சிவகார்த்திகேயன் படம்
டாக்டர் திரைப்படத்திலிருந்து வெளியான செல்லம்மா பாடல் யூ-டியூப்பில் சாதனை படைத்து வருகிறது.
Chellamma song
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செல்லம்மா' பாடல் நேற்று வெளியானது. வீடியோவின் தொடக்கத்தில் பாடலைப் பற்றி சிவகார்த்திகேயன், அனிருத், இயக்குநர் நெல்சன் ஆகிய மூவரும் வேடிக்கையான முறையில் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.
டிக் டாக் தடையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்பாடல் யூ-டியூப்பில் இரண்டு மில்லியன் வியூவ்ஸ் கடந்து சாதனை படைத்துள்ளது.