தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் சிறு கடைகள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை மூடப்பட்டுள்ளன.
இத்த கொஞ்சம் ஞாபகம் வச்சிக்கோங்கோ - யோகிபாபுவின் அறிவுரை - தேசிய ஊரடங்கு உத்தரவு
தேசிய ஊரடங்கால் பூட்டியிருக்கும் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கும் போது இதை கவனத்தில் கொள்ளுமாறு நகைச்சுவை நடிகர் யோகிபாபு ட்விட்டரில் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் மூடப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் திறக்கும் போது சில விஷயங்களை கவனமாக பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதில், ஊரடங்கு உத்தரவுக்கு பின் தொழிற்சாலை, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தயவுசெய்து ஒன்றை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் அலுவலகம், தொழிற்சாலைகளில் உள்ள மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள். உள்ளே நுழைந்தவுடன் சுவிட்சை ஆன் செய்ய வேண்டாம். ஏனெனில் கடந்த ஒரு மாத காலமாக பூட்டப்பட்டிருப்பதால் எலிகள், பூனைகள் மின் வயர்களை சேதப்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் நீங்கள் திடீரென சுவிட்சை ஆன் செய்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே மின் வயர்களை சோதனை செய்த பின்னர் ஆன் செய்யுங்கள் என யோகிபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.