தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கருத்து சுதந்திரத்தின் உயிர் பறிக்கும் ஒன்றிய அரசு - கமல் ஹாசன்

அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை ஒளிப்பதிவு திருத்த மசோதா மூலம் ஒன்றிய அரசு கைப்பற்ற நினைக்கிறது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

KAMAL
KAMAL

By

Published : Jul 3, 2021, 6:11 PM IST

Updated : Jul 3, 2021, 10:06 PM IST

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019ஆம் ஆண்டு பிப்ரவர் 12ஆம் தேதி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது எழுந்த எதிர்ப்பையடுத்து பின்னர் அது நிலைக்குழுவிற்கு அனுப்பட்டது. கடந்தாண்டு மார்ச் மாதம் நிலைக்குழு அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான படங்களுக்கு மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படவுள்ளன. இந்த மசோதாவை எதிர்த்து கடந்த சில நாள்களாக திரைப்படத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒளிப்பதிவு திருத்த மசோதா வரைவு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சினிமா ஜனநாயகத்தின் குரல்

அதில், ”படைப்பு சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் தங்களுக்கு ஏற்ப சுலபமாக வளைத்து ஒடித்துக்கொள்ள ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சினிமா மக்களை பிரதிபலிக்கிறது. பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சினிமா ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்கிறது. இந்த குரலைத்தான் ஒளிப்பதிவு திருத்த மசோதா மூலம் நெறிக்க ஒன்றிய அரசு முயலுகிறது.

முரணான அதிகாரங்கள்

உச்ச நீதிமன்றத்தால் அரசமைப்புக்கு முரணானது என குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை இந்த மசோதா மூலம் ஒன்றிய அரசு கைப்பற்ற நினைக்கிறது. எந்த அரசாங்கமும் எந்தப் படைப்பையும் எப்படி வேண்டுமானாலும் முடக்கிப்போடும் அதிகாரத்தை இந்த மசோதா அளிக்கிறது.

மனிதரின் குரல்களை அடக்க ஒன்றிய அரசு முயற்சி

சமானியனின் குரல் வலுப்பெற்று வரும் இணைய புரட்சி காலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் அரசோ மனிதரின் குரல்களை அடக்க பார்கிறது. சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் குரல் ஒலித்துவிடகூடாது என நினைக்கிறது.

இந்த மசோதவை எதிர்த்து அனைத்து கட்சியினரும், ஊடகங்களும் குரல் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் தயக்கம் இருந்தால் இதை முன்னெடுத்து செல்லும் முன்னத்தி ஏராக மக்கள் நீதி மய்யம் திகழும். இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்ற அனுமதித்தால், நிச்சயம் நம்ம எதிர்கால சந்ததியினரை பாதிக்கும்” என்று கூறியுள்ளார்

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவோம்! - புதிய நிர்வாகிகளுக்கு கமல் ஊக்கம்

Last Updated : Jul 3, 2021, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details