- தமிழில் நல்ல படங்கள் இருந்தும் பெயர் தெரியாத படத்திற்கு கொடுத்தது வேதனையாக உள்ளது - இயக்குநர் பாரதிராஜா.
- தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது - நடிகை சுஹாசினி
- தமிழ் படங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு குரல் கொடுக்கவேண்டும் - இயக்குநர் வசந்த பாலன்
- தேசிய திரைப்பட விழாவில் தமிழ் படங்கள் தொடர்ந்து புறக்கணிக்கும் அபாயம் உள்ளது - கவிஞர் யுகபாரதி
- தேசிய விருது என்பது தேர்வு குழுவினரின் மனநிலை - ஜீ. வி. பிரகாஷ்
தேசிய திரைப்பட விருது: இத்தனை நாளுக்குப் பின் கருத்து தெரிவிக்கும் பிரபலங்கள் - தமிழ் திரையுலகம்
தமிழில் நல்ல படங்கள் இருந்தும் தேசிய திரைப்பட விருதில் புறக்கணிப்படுவது குறித்து தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
NFA
மத்திய அரசின் தகவல் மற்றும ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுபெறுவோரின் பட்டியல் ஆகஸ்ட் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலம் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இது தொடர்பாக தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.