தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தம்பியை இழந்ததுபோல் உணர்கிறேன்' - புனித் மறைவால் வாடும் பிரபலங்கள் - புனித் ராஜ்குமார் உய்ரிழப்பு

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புனித்
புனித்

By

Published : Oct 29, 2021, 4:45 PM IST

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (அக்.2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மோகன்லால்

புனித் ராஜ்குமாரின் இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தியை நம்புவது கடினமாக இருக்கிறது. நான் ஒரு தம்பியை இழந்தது போல் உணர்கிறேன்.

மோகன்லால் பதிவு

நடிகர் மம்மூட்டி

புனித் உயிரிழந்த செய்திக் கேட்டு, இதயம் நொறுங்கியது. இது திரையுலகினருக்கு பெரும் இழப்பு. புனித் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மம்மூட்டி வெளியிட்ட பதிவு

நடிகர் சீரஞ்சிவி

புனித் ராஜ்குமார் சீக்கிரம் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கண்ணீருடன் இரங்கல் தெரிவிக்கிறேன்.

சீரஞ்சிவி வெளியிட்ட பதிவு

தயாரிப்பாளர் போனி கபூர்

புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அபாரமான உழைப்பால் மக்களின் மனதை கவர்ந்த ஒரு சக்திவாய்ந்த நடிகர்.

தயாரிப்பாளர் போனி கபூர் இரங்கல்

நடிகர் நாகார்ஜுனா

புனித் மறைவு செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்.

நடிகர் நாகார்ஜுனா இரங்கல்

இதையும் படிங்க:கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details