2013ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலுமிருந்து ஊக்கமளிக்கும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி இன்று வெளியிட்டது. அதில் பா. ரஞ்சித்தின் ’Casteless Collective' இசைக்குழுவை சேர்ந்த இசைவாணி இடம்பிடித்துள்ளார்.
பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் ’Casteless Collective' இசைவாணி - Singer Isaivani
சென்னை: பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் ’Casteless Collective' இசைவாணி இடம்பிடித்துள்ளார்.
Singer Isaivani
கானா உலகம் ஆண்களுக்கானது என்ற பிம்பத்தை உடைத்து தனியொரு பெண்ணாக அதில் கலக்கிவருகிறார். அவர் பாடிய ‘பெரிய கறி’ பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிபிசி பட்டியலில் இசைவாணி இடம்பெற்றதற்கு ரஞ்சித் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா. ரஞ்சித், பெருமைகொள்ளத்தக்க தருணம் இது, வாழ்த்துகள் இசை. இந்த அங்கீகாரத்தை அளித்த பிபிசிக்கு நன்றி. இது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும், மகிழ்ச்சி! ஜெய் பீம்! என குறிப்பிட்டுள்ளார்.