நடிகர் சிவகார்த்திகேயன் 'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் சி.பி. சக்கரவர்த்தி இயக்கி வரும் 'டான்' படத்தில் நடித்து வருகிறார்.
இதில் பிரியங்கா மோகன், யோகி பாபு, சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேள்ள ஆனைமலை ஆற்றங்கரை பகுதியில் நடைபெற்று வந்தது. மேம்பாலப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றதால் அதைக் காண பொதுமக்கள் திரண்டனர்.
இந்நிலையில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் படப்பிடிப்பைக் காண்பதில் ஆர்வம் காட்டியதால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் புகார்களின் அடிப்படையில், அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக வருவாய்த் துறையினர் 19,400 ரூபாய் படக்குழுவினருக்கு அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க:ஹரி - அருண் விஜய்யின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியீடு