தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநராக அறிமுகமாகும் பிருந்தா மாஸ்டர் - ஹீரோ யார் தெரியுமா? - நடிகர் துல்கர் சல்மான்

நடன இயக்குநர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Brinda master

By

Published : Oct 26, 2019, 11:11 AM IST

சினிமாத்துறையில் இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் கிடையாது. திறமை மற்றும் கடின உழைப்பால் பிரபலங்கள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளிலும் சாதித்துக் காட்டியுள்ளனர். அந்தவகையில், வாய்ஸ் ஆர்டிஸ்டாக இருந்த சீயான் விக்ரம் நடிகராகவும், இசையமைப்பாளர்களாக இருந்த விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிகர்களாகவும், நடிகராக இருந்த தனுஷ் இயக்குநராகவும் சாதித்துக் காட்டியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

இந்த வரிசையில் தமிழ் சினிமாவிற்கு புதிய பெண் இயக்குநர் ஒருவர் கிடைக்கப்போகிறார். முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவரும் பிரபல நடன இயக்குநர் கலாவின் சகோதரியுமான பிருந்தா புதிதாக தமிழ் திரைப்படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ராதிகா சரத்குமாருடன் பிருந்தா மாஸ்டர்

நவரச நாயகன் கார்த்திக் நடித்த 'நந்தவன தேரு' படம் மூலம் நடன இயக்குநராக அறிமுகமான பிருந்தா, சுந்தர் சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, மணி ரத்னம் இயக்கிய இருவர், கடல் மற்றும் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்டோர் நடித்த படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய பிருந்தா, தற்போது இயக்குநாக அவதாரம் எடுக்கவுள்ளார்.

சர்கார் திரைப்படத்தில் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் உடன் பிருந்தா

தமிழில் இவர் புதிதாக இயக்கும் படத்தில் இளம் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கோலிவுட், மோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 2020 பிப்ரவரியில் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் துல்கர் சல்மான்

இதையும் படிங்க...

'தலைவி' குழுவினருடன் கங்கனா தீபாவளி கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details