சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது இந்தியாவையும் ஒரு கை பார்த்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அவர்களுடன் இணைந்து திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய பாலிவுட் பிரபலங்கள் அந்த வகையில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், ‘அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இவரைத்தொடர்ந்து நடிகை மலாக்கா அரோரா, தனது ரசிகர்ளுக்கு அறிவுரை வழங்கும் வழங்கும் விதத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், 'வணக்கம் நண்பர்களே. இதை எழுதும்போது மகிழ்ச்சியாக இல்லை.
WHO பரிந்துரைத்த பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள ஹாலிவுட் மருமகளின் ஆலோசனை ட்வீட்