அறிமுக இயக்குநர் கேஆர் சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'போதை ஏறி புத்தி மாறி'. ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தீரஜ், துஷாரா, ராதாரவி, சார்லி, அஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. புதுமுகங்களை வைத்து ஒரு வித்தியாசமான களத்தை எடுக்கப்பட்டுள்ள இப்படம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'போதை ஏறி புத்தி மாறி' டீசரை வெளியிட்ட சூர்யா! - பிரேத்யக பேட்டி
அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள 'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் கே.ஆர். சந்துரு கூறுகையில், 'போதை ஏறி புத்தி மாறி படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யாவிற்கு நன்றி. இது போன்ற ஒரு சிறிய படத்தை ஆதரிக்க அவர் ஆர்வம் காட்டுவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் எங்களை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தினார். இந்த டீசரை பார்த்து தனிப்பட்ட முறையில் மனதார பாராட்டினார்.
நல்ல கதையம்சம் உள்ள படங்களில், பெரிய நடிகர்களோ அல்லது கலைஞர்களோ இல்லாத போதும், டீசர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கும் பல நிகழ்வுகளை நாம் சந்தித்திருக்கிறோம். இதுவே போதை ஏறி புத்தி மாறி படத்தின் டீசரை உற்சாகத்தை எங்களுக்கு வழங்கியது. டீசரை பார்த்த பலரும், சரியாக புரிந்து கொண்டிருப்பதோடு, எங்களை வெகுவாக பாராட்டினர். படத்தின் ட்ரைலரை விரைவில் வெளியிட இருக்கிறோம்' என்று அவர் தெரிவித்தார்.