பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம்தூம் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் வாரிசுகள் செலுத்தும் ஆதிக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அதைத்தொடர்ந்து சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையை விமர்சித்த கங்கனா ரணாவத், ஒரு கட்டத்தில் மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், மும்பையிலுள்ள கங்கனா ரணாவத்தின் பங்களாவில் உள்ள அலுவலக பகுதி விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக இரண்டு முறை நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் கங்கனா ரணாவத்தின் பங்களாவில் உள்ள அலுவலக பகுதி இடிக்கும் பணிகளை மும்பை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
தனது அலுவகம் இடிக்கப்படுவதை எதிர்த்து கங்கனா தொடர்ந்துள்ள வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.