இணைய உலகில் இளைஞர்களின் விருப்பமான யூடியூப் சேனல் பட்டியலில் பிளாக் ஷீப்(Black Sheep) இடம்பெற்றுள்ளது. ஆர்.ஜே. விக்னேஷ், அரவிந்த் உள்பட பல இளைஞர்கள் இந்தச் சேனலை நடத்தி வருகின்றனர்.
சித்து விளையாட்டு, அன்பு அன்ஃபோல்டு, தனி ஒருவன், இது அது இல்ல உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி இளைஞர்களின் பேராதரவை பிளாக் ஷீப் பெற்றுள்ளது.
தற்போது பிளாக் ஷீப் குழு புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
'திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ்' என்ற புதிய வலைத்தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்கிறார். இந்த வலைத் தொடரை டியுட் விக்கி இயக்குகிறார். 10 பகுதிகளைக் கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
மீட் மிஸ்டர் திருவள்ளுவர் என்ற தலைப்பில் உருவாகிவரும் இந்தத் தொடரில், இளைய தலைமுறைகள், குறிப்பாக ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை திருக்குறள் வாயிலாக ஹர்பஜன் சிங் தன் ஸ்டைலில் சொல்லயிருக்கிறார். இவருடன் ஆர்.ஜே.விக்னேஷ் மற்றும் சுட்டி அரவிந்த் நடிக்கின்றனர்.
பிளாக் ஷீப் குழுவுடன் இயக்குநர் சேரன் இதன் தொடக்க விழா சென்னை ஃபோரம் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பிளாக் ஷீப் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் அறிமுக விழா இதையும் படிங்க...
மிருகங்களுடன் பேசும் 'ஜுனியர் ராபர்ட் டவுனி'யின் 'டூலிட்டில்' - போஸ்டர்கள் வெளியீடு