தமிழில் விஜய்யின் ‘சச்சின்’ படத்தில் நடித்ததன் மூலம் அறியப்படுபவர் பிபாஷா பாசு. அதன்பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை பிபாஷா. ’ஓம்காரா’, ‘தூம் 2’ உள்ளிட்ட பாலிவுட்டின் முக்கிய திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.
பிபாஷாவின் குழந்தைகள் தின புகைப்படத்தில் கரண் சிங் லவ்ஸ்! - குழந்தைகள் தினம்
குழந்தைகள் தினத்தன்று தனது சிறு வயது புகைப்படத்தை நடிகை பிபாஷா பாசு பகிர்ந்துள்ளார்.
Bipasha basu children's day photo
குழந்தைகள் தினத்தன்று பிரபலங்கள் பலரும் தங்கள் சிறு வயது புகைப்படத்தை பகிர்வது வழக்கம். அந்த வகையில் பிபாஷா பாசு தனது சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து இந்த பிறப்பைத் தந்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மற்றொரு சிறு வயது புகைப்படம் ஒன்றில் தான் கல்யாண அலங்காரத்தோடு இருக்கும் புகைப்படத்தை இணைத்து பிபாஷா ஷேர் செய்திருந்தார். அதைப் பார்த்த பிபாஷாவின் கணவர், அப்போது இப்போதும் எப்போதும் நீ அழகு என கமெண்ட் செய்துள்ளார்.