தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆன்லைனில் வெளியான 'பிகில்' டீசர்! - bigil mp3 download

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் டீசர் க்ளிப் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

Atlee at bigil shooting spot

By

Published : Sep 30, 2019, 8:13 PM IST

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பிகில்’. இதில் ஜாக்கி ஷெரோஃப், யோகி பாபு, ஆனந்த் ராஜ், விவேக் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதன் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஆன்லைனில் யாரோ இதனை பதிவேற்றம் செய்துள்ளனர்.

Atlee at bigil shooting spot

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களின் படப்பிடிப்பு காட்சிகள், டீசர் உள்ளிட்டவை இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. என்னதான் படக்குழுவினர் ஜாக்கிரதையாக இருந்தாலும், சில புல்லுருவிகள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் டீசர் க்ளிப் வெளியாகியுள்ளது என்று கூறப்படுகிறது. விஜய்யின் என்ட்ரி சீன் என ட்விட்டர் வலைதளம் முழுவதும் இந்த புகைப்படம் உலாவி வருகிறது.

Bigil teaser clip photo

எனினும் இது ‘பிகில்’ டீசர் இல்லை என ஒரு சிலர் பதிவு செய்துவருகின்றனர். ஆனால் விஜய் படங்களில் இப்படி நடப்பது புதிதல்ல, ‘வில்லு’ படத்தின் ஒரு சண்டைக் காட்சியே படம் வெளியாவதற்கு முன் ஆன்லைனில் உலாவியது.

இதையும் படிங்க: செத்துக்கிட்டு இருக்கும் தமிழ் சினிமாவை 'பெட்ரோமாக்ஸ்' பிழைக்க வைக்குமா..!

ABOUT THE AUTHOR

...view details