தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தளபதி' தாயாரை சந்தித்த 'தல' பட நடிகை! - விஜய் அம்மா

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தல-தளபதி ரசிகர்கள் சண்டையிட்டு கொள்வது வழக்கம். அதே நேரத்தில் அவர்கள் இணைந்து உருவாக்கும் ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாகி வரும். தற்போது 'பிக்பாஸ்' அபிராமி செய்துள்ள காரியம் ஒன்று இருதரப்பு ரசிகர்களையும் 'பிகில்' அடிக்க வைத்துள்ளது.

abirami

By

Published : Oct 14, 2019, 10:03 AM IST

'பிக்பாஸ்' போட்டியாளர் அபிராமி மரியாதை நிமித்தமாக விஜய் தாயாரை சந்தித்த புகைப்படம் அதிக லைக்ஸை பெற்று வருகிறது.

'பிக்பாஸ் சீசன் 3' முடிவடைந்த நிலையில் அதன் போட்டியாளர் இன்னும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருந்து வருகின்றனர். ஒருபக்கம் சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் ஒன்றாக சுற்றி வருகின்றனர். சமீபத்தில் சாக்‌ஷி, ஷெரின் ஆகியோர் சேரனை அவரது வீட்டில் சந்தித்தனர். சேரனும் லாஸ்லியாவும் வனிதாவின் வீட்டு நிகழ்ச்சிக்கு சர்பைரஸ் விசிட் அடித்தனர். இப்படி ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்று நட்பு பாராட்டி வருகின்றனர்.

விஜய் தாயாருடன் அபிராமி

இந்நிலையில், அபிராமி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரை சந்தித்துள்ளார். அப்போது அவர் எடுத்த புகைப்படத்தை தல-தளபதி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அபிராமி சமீபத்தில் அஜித்தின் நடிப்பில் வெளியான 'நேர் கொண்டபார்வை' படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் விஜய்யின் தாயாரை சந்தித்துள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் வாசிங்க: சேரனுக்கு சர்பரைஸ் கொடுத்த சாக்‌ஷி, ஷெரின்

ABOUT THE AUTHOR

...view details