பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்து தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர், அவரது நண்பரும் நீண்டநாள் காதலருமான சிவாஜி தேவ் (எ) சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டார். சிவாஜி தேவ் நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் ஆவார்.
எங்கக் குழந்தையின் பெயர் இதுதான் - சுஜா வருணியின் மகிழ்ச்சி ட்வீட் - சுஜா வருணி
நடிகை சுஜா வருணி தனது குழந்தையின் பெயரை தற்போது அறிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் சுஜா வருணியின் வளைகாப்புப் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகமாகப் பகிரப்பட்டன. இதனையடுத்து, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜா வருணிக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது குழந்தையின் பெயரை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், 'எல்லோருக்கும் வணக்கம். எங்கள் குடும்பத்திற்கு மிகச் சிறப்பான நாள். பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் இதனைப் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் குழந்தையின் பெயர் சூட்டுவிழா நடைபெற்றுள்ளது. எங்கள் குழந்தைக்கு எஸ்.கே. அத்வைத் என பெயர் சூட்டியுள்ளோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.