தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

25 லட்சம் பார்வையாளர்கள் - தெறிக்கவிடும் 'இன்னா மயிலு' பாடல்! - லிஃப்ட் சிங்கிள்

சென்னை: கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'லிஃப்ட்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய 'இன்னா மயிலு' பாடல் 25 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

lift
lift

By

Published : Jul 29, 2021, 6:21 PM IST

ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக 'பிக்பாஸ்' புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார். ஜி மதன் படத்தைத் தொகுக்க, சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதிஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'லிஃப்ட்' படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி வினித் வர பிரசாத் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'இன்னா மயிலு.' சமீபத்தில் வெளியானது.

பாடலாசிரியர் ஆர். நிஷாந்த் எழுதியிருக்கும் இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருக்கிறார். இவருடன் சூப்பர் சிங்கர் பூவையார் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

'இன்னா மயிலு..' பாடல் வெளியானதிலிருந்து குழந்தைகள் முதல் இளைஞர்கள்வரை அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், தற்போதுவரை 25 லட்சம் பார்வையாளர்களை கடந்து இப்பாடல் சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது!

ABOUT THE AUTHOR

...view details