பிக்பாஸ் 14ஆம் நாளே புறணிப் பேச்சுகளோடுதான் ஆரம்பித்தது. பிரியங்கா, அபிஷேக் இருவரும் கார்டன் ஏரியாவில் இசைவாணி மாஸாக வர விரும்புவது குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
கமலின் மாஸ் என்ட்டிரி
கமல் ஹாசன் எபிசோட் என்றாலே அவர் அணிந்திருக்கும் உடையைத் தான் அனைவரும் பார்ப்பார்கள். நேற்று (அக்டோபர் 18) அதுவும் சொல்லவே வேண்டாம்; அட்டகாசமாக இருந்தது. ஆண்டுக்காண்டு பிக்பாஸிற்கு மக்களிடம் ஆதரவு கூடிக்கொண்டே செல்கிறது. இந்த ஆண்டும் கூடுதலாகியுள்ளது.
அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்ற கமல், "ஆரம்பத்திலிருந்தே இந்த சீசனுக்கு மக்களிடம் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பெருமையோடு உங்கள் அனைவருக்கும் பொறுப்பும் இருக்க வேண்டும்" என்றார்.
கமலுக்கு விபூதி அடித்த அபிஷேக்
யாரெல்லாம் பிக்பாஸ் பார்த்துவிட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளீர்கள்? எனக் கமல் ஹாசன் கேட்க... தாமரை, இமான் நிகழ்ச்சியைப் பார்த்தது இல்லை என்றனர். இவர்கள் சொன்னதைகூட நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அபிஷேக் நான் பார்க்கவே இல்லை. உங்கள் படங்களை மட்டுமே நான் பார்ப்பேன் எனக் கமல் ஹாசனுக்கே விபூதியடித்தார்.
சமீபத்தில் அபிஷேக், கமல் ஹாசனையும், பிக்பாஸ் பற்றியும் பேசிய பழைய காணொலி வெளியானது. அதைக் கமல் ஹாசன்கூட பார்த்திருப்பார்.
காணாமல் போகவில்லை
போட்டியாளர்கள் யார் இந்த வாரம் காணாமல்போனவர்கள், ஜொலித்தவர்கள் என்ற டாஸ்க் முடிவைக் கமல் ஹாசன் கேட்டார். இமான் அண்ணாச்சி ஜொலித்தார் என்றும் சின்ன பொண்ணு ஜொலிக்கவில்லை எனவும் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த சின்ன பொண்ணு, நான் காணாமல் போகவில்லை. காணாமல்போக மாட்டேன் என்றார்.
எதிர்பார்த்த எலிமினேஷன்
அபிஷேக், சின்ன பொண்ணு, வருண், மதுமிதா, நாடியா ஆகியோர் இறுதியாக எலிமினேஷன் பட்டியலில் இருந்தனர். அபிஷேக், நாடியா தவிர மற்ற அனைவரும் காப்பாற்றப்பட்டுவிட்டதாகக் கமல் ஹாசன் அறிவித்தார். இவர்கள் இருவர் பெயர் வந்ததுமே நம்மால் ஒரு அளவுக்கு கணிக்க முடியும், யார் இந்த வாரம் வெளியே போகப்போகிறார் என்பது.
எதிர்பார்த்த முதல் எலிமினேஷன் அபிஷேக் புறணி பேசி பிக்பாஸில் கன்டென்ட் கொடுப்பதால், அவர் எலிமினேஷனிலிருந்து தப்பித்தார். முதல் நபராக நாடியா எலிமினேஷனில் சிக்கி வெளியே வந்தார்.
இதையும் படிங்க:BB DAY 12: கொளுத்திப்போட்ட பிக்பாஸ் - அம்மனாக மாறி வதம்செய்த தாமரை