பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார். இப்படம் தற்போது இறுதி கட்டப் பணிகளை நெருங்கி உள்ளது.
பிக்பாஸ் போட்டியாளர் படத்துக்கு இப்படி ஒரு பிரச்னையா...! - தர்ஷன்
பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் நடித்திருந்த படத்தின் தலைப்பு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் இயக்குநர் கார்த்திகேயன் 'மேகி (MAGGY)' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படமும் இசை சேர்ப்பு போன்ற இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து தணிக்கைக்குழுவினரின் ஒப்புதலுடன் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் தர்சன் நடித்து வந்த படத்திற்கு படக்குழுவுக்கு 'மேகி (MAGIE)' என்று பெயரிட்டுள்ளனர். இதனால் ஏற்கனவே மேகி என்று பெயரிடப்பட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படங்களின் தமிழ் பெயர் ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் இரு படங்களின் தலைப்பு வெவ்வேறாக உள்ளது. இதனால் தற்போது இரு படக்குழுவினர் இடையே படத்தின் தலைப்பு யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை கிளம்பி உள்ளது.