பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் நுழைந்து தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் சுஜா வருணி, தனது நண்பரும் நீண்ட நாள் காதலருமான் சிவாஜி தேவ் (எ) சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டார். சிவாஜி தேவ் நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் ஆவார்.
'என் சிம்பா வந்தாச்சு விரைவில் உங்களை சந்திப்பான்' - பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் குஷி ட்வீட் - சிவாஜி தேவ்
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுஜா வருணிக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
சிலமாதங்களுக்கு முன் சுஜா வருணியின் சீமந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டன. இதனையடுத்து, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜா வருணிக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து சிவாஜி தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இறுதியாக எங்களுக்கு பையன் பிறந்துள்ளான். என் சிம்பா வந்தாச்சு. தாயும், சேயும் நலமுடன் இருக்கின்றனர். விரைவில் உங்களை சந்திப்பான். ஆகஸ்ட் 21 என் வாழ்வில் மறக்க முடியாத நாள். என் மகன் இந்த பூமிக்கு வந்த நாள், நான் நடித்த ஃபிங்கர் டிப் (Finger tip) வெப் சீரிஸூம் அன்றுதான் வெளியாகி உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.